சவாலாக உள்ளது: காவேரி மருத்துவமனை!

திமுக தலைவர் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளைத் தொடர்ந்து சீராகச் செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவலையடுத்து இன்று (ஆகஸ்ட் 6) மதியம் முதல் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் அதிகளவில் குவிய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் சரியாக மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது முதிர்வு சம்பந்தமான பிரச்சினைகளால் அவரின் முக்கிய உறுப்புகளைத் தொடர்ந்து சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.

அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அடுத்த 24மணி நேரத்திற்கு அவருடைய உடல்நிலை வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#Kauvery  #Hospital  #Karunanithi   #Tamil  #tamilnews
Powered by Blogger.