புலம்பெயர்ந்து தாயகம் திரும்பியோருக்கான நடமாடும் சேவை!

புலம்பெயர்ந்து தாயகம் திரும்பியவர்களுக்கான நடமாடும் சேவை இன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நடமாடும் சேவைக்கு ஓபர் சிலோன் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையும் நடமாடும் சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவை இணைந்து புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் என்பன போன்ற சேவைகளை வழங்குகின்றன.
Powered by Blogger.