அம்பாறை காரைதீவு பகுதியில் பெரும் பதற்றம்!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த ஒரு குழு, அதில் பயணம் செய்த பயணிகள் சாரதி நடத்துனர் ஆகியோரை தாக்கிக் காயப்படுத்தியதுடன் பொதுப்போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி தப்பி சென்றது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்றது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் தொலைபேசிகள் குறித்த தாக்குதல் மேற்கொண்ட குழுவினரால் பறிக்கப்பட்டது.

பேருந்தை அரை மணித்தியாலமாக மறித்து வைத்திருந்த குழு, சாரதி நடத்துனரை பல கேள்விகள் தொடுத்து தாக்கியது.

சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் கூடியதை அறிந்த அக்குழு அவ்விடத்தில் இருந்து நழுவிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் அதிக மதுபோதையில் காணப்பட்டதுடன், தம்வசம் கத்தி இரும்பு தடிகளையும் வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

#Amparai    #Karathivu     #srilanka  #tamilnews   #police
Powered by Blogger.