வெள்ளவத்தை ஊடாக தப்பியோடிய நபர் பம்பலப்பிட்டியில் கைது!

பம்பலப்பிட்டியில் நடுவீதியில் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துரத்தி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தளை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையில் பொறியியலாளராக செயற்படும் நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை தனது வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் இருந்து குறித்த நபரை துரத்தி சென்ற பொலிஸார் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#Bambalapitiya   #colombo   #wellawtta   #tamilnews   
Powered by Blogger.