துப்பாக்கிச் சூட்டில்- யானை உயிரிழப்பு!

அநுராதபுரம் ஹிதோகம, ஹல்மில்லகுளம் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது.

யானைக் குட்டியின் வலது பக்க கண், காது மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த யானைக் குட்டியை அவதானித்த பிரதேசவாசிகள் அநுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கினர்.

இது சுமார் நான்கு வயதுடைய யானைக் குட்டி என்று ன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


#anurathapuram   #Elephant  #srilanka #tamilnews  #tamilarul.net

No comments

Powered by Blogger.