அம்பலாந்தோட்டை இரகசியத் தகவலையடுத்து இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் விபச்சார விடுதியினை நடாத்திச்சென்ற நபரும் பெண்களை குறித்த தொழிலுக்கு அழைத்து வரும் நபரொருவரும் மற்றும் அந்த விடுதியில் வேலை செய்த நபரொருவரும் இரு பெண்களுமே கடந்த 15ம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சிவில் உடையில் சென்ற பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபச்சாரத்திற்கென அழைத்து வரப்பட்ட இரு பெண்களும், புத்தளம் மற்றும் கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியை நடத்திச் சென்றவர் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறித்த பிதேசத்திற்கு வந்து வாடகைக்கு விடுதியை நடாத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விடுதிக்கு மாதம் 90,000 ருபா செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் பல கர்ப்பத்தடை மாத்தரைகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
#Hambantota     #srilanka  #tamilnews 

No comments

Powered by Blogger.