தீர்க்க சுமங்கலிகளாக வாழ பெண்களால் அனுஸ்டிக்கப்படும் விரதம்!

சுமங்கலி விரதம் எனவும், வரலட்சுமி விரதம் எனவும் அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்கள் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.

சுமங்கலியாக நீண்டகாலம் வாழ்வதென்பது பெறுதற்கரிய பேறாகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், கணவன் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் உயிர் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவதுடன், இல்லத்தில் செல்வம் பெருகும்.

கணவன நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதனால் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


#tamilnews   #Hindu  #Temple   #Thirkkasumangali
Powered by Blogger.