ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்!

கிளிநொச்சி- கண்டாவளை கோரக்கன்கட்டு கிராமத்தில் வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட 9 ஆடுகளை கட்டாக்காலி நாய்கள் கொன்றுள்ளன.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த 9 ஆடுகளினதும் பெறுமதி ஒரு லட் சத்தி 80 ஆயிரம் என ஆட்டின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கிராமத்தில் தொடர்ச்சியா கட்டாக்காலி நாய்களினால் கால்நடைகள் பாதிக்கப் படுவதாக கூறும் மக்கள் 40 வரையான ஆடுகள் இதுவரை கொல்லைப்பட்டுள்ளதாக வும் கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என மக்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.