முல்லைத்தீவு மீனவர் பிரச்சினை – மாவட்டச் செயலகத்தில் கலந்தாய்வு

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்தொழில் நீரியல்வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்  விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழுவினர் இன்று முல்லைத்தீவுக்குப் பயணித்தனர்.

தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும்  மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாவடடச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கினிகே ஜனகபிரசன்ன குமார மற்றும் அமைச்சின்  அதிகாரிகள்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிரமலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, எம் ஏ. சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்  மற்றம் மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன்,  கமலேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்   மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்,  புதுக்குடியிருப்பு மற்றும்  கரைதுறைப்பற்று பிரதேச செயலர்கள்  மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்  சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.