சிங்கள மீனவர்களை பிடித்த தமிழ் மீனவர்களை அச்சுறுத்திய பொலிஸ்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறையை பயன்படுத்தி கடற்றொழில் செய்த சிங்கள மீனவர்களை தமிழ் மீனவர்கள் கைது செய்துள்ள நிலையில் குறித்த சிங்கள மீனவர்களை கைது செய்தது பிழை என பொலிஸார் கூறியுள்ளனர்.

கடலில் ஒளி(வெளிச்சம்) பயன்படுத்தி மீன்பிடிப்பது இலங்கை சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சட்டவிரோதமாக ஒளி(வெளிச்சம்) பன்படுத்தி மீன்பிடித்த சிங்கள மீனவர் ஒருவரையும் அவர் பயன்படுத்திய உபகரணங்களையும் தமிழ் மீனவர்கள் பிடித்துள்ளதுடன் அவரை முல் லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவரை பிடித்துக் கொடுத்த தமிழ் மீனவர்களை அச்சுறுத்தியுள்ள பொலிஸார் குறித்த சிங்கள மீனவர்களை எப்படி பிடித்தீர்கள்? அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிங்கள மீ னவர்களுக்கு உணவும், அவர்கள் பிடித்த மீன்களுக்கு ஜஸ் கட்டிகளையும் வழங்கிய தமிழ் மீனவர்கள் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.