மெக்ஸிகோவில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுப்பு!

அமெரிக்க எல்லையை அண்மித்த மெக்ஸிகோவின் பிரபலமான நகரமான குயுடேட் ஜுவாரெஸ் நகர்ப் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து பதினொரு பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


நாட்டின் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதியாக தொிவான அன்றஸ் மெனுவல் லோபஸ் ஒப்ராடரின் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவரது வருகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்களுள் எட்டு ஆண் மற்றும் மூன்று பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலைக்கார கும்பலொன்றுக்கும், குறித்த வீட்டிலிருந்தவர்களுக்கும் இடையிலான இருதரப்பு மோதலிலேயே குறித்த உயிரிழப்புகள் சம்பவித்திருப்பதாக அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மெக்ஸிகோவிலேயே அதிகமான குற்றச் செயல்கள் இடம்பெறும் நகரமாக குயுடேட் ஜுவாரெஸ் நகர் விளங்கிவருகிறது. அண்மைக் காலமாக குயுடேட் ஜுவாரெஸ் நகரில் அதிகரித்துவரும் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளினால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments

Powered by Blogger.