இன்டர்போல் அதிகாரிகள் இலங்கையை நோக்கி பயணம்!

சர்வதேச பொலிஸாரான இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இணையத்தின் ஊடாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி நெறியொன்று முன்னெடுக்கும் நோக்கில் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

மூன்று நாள் பயிற்சி நெறியொன்று எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச பொலிஸாரின் சைபர் பாதுகாப்பு பிரிவு தொடர்பில் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

#Srilanka   #interpol   #Tamilnews #Travelling
Powered by Blogger.