18 குடும்பங்கள் மஸ்கெலியா பகுதியில் உள்ள வெளியேற்றம்!

மஸ்கெலியா - பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மேற்படி குடியிருப்பில் வசித்தும் வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வெளியேற்றப்பட்டுள்னர்.

வெளியேற்றப்பட்ட அனைவரும் அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அம்பகமுவ பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
#Hatton     #Weather    #srilanka 

No comments

Powered by Blogger.