எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த அணிக்கு வழங்க முடியாது!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேசிய அரசின் அமைச்சரவையிலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, பொது எதிரணியில் இருப்பவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகிய பின்னரே எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைக் கோரலாம் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


#M A Sumanthiran       #jafffna   #srilanka    #Makintha
Powered by Blogger.