தாயக மண் காக்க அணி திரள்வோம்!

தமி­ழர்­க­ளின் பூர்­வீக வாழ்­வி­டங்­கள் திட்­ட­மிட்டு அர­சால் அப­ க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், மகா­வலி எல் வல­ யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் பரம்­ப­ரைக் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தைத் தடுத்து நிறுத்­த­வும் தமிழ் மக்­கள் அனை­வ­ரும் நாளை அணி­தி­ரள வேண்­டும் என்று மகா­வலி எதிர்ப்பு தமி­ழர் மர­பு­ரி­மைப் பேரவை அழைப்பு விடுத்­துள்­ளது.

முல்­லைத்­தீ­வில் மகா­வலி எல் வல­யம் ஊடா­கத் தமிழ் மக்­க­ளின் காணி­கள் பறிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து முல்­லைத்­தீ­வில் நாளை மாபெ­ரும் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் காணி­கள் பறிக்­கப்­ப­டு­வதை தடுத்­துப் பாது­காக்­கும் நோக்­கில் கிரா­மிய அமைப்­புக்­கள் மற்­றும் பொது அமைப்­புக்­கள் பங்­க­ளிப்­பு­டன் மகா­வலி எதிர்ப்பு தமி­ழர் மர­பு­ரி­மைப் பேரவை என்­னும் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு அதன் ஏற்­பாட்­டில் இந்­தப் பேரணி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தப் பேரணி முற்­ப­கல் 11 மணிக்கு முல்­லைத்­தீவு பிட­பிள்­யூடி சந்­தி­யில் (சம்­பே­து­ரு­வா­ன­வர் ஆல­யம் முன்­பாக) ஆரம்­பித்து முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தைச் சென்­ற­டை­யும்.

போராட்­டம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்பு முல்­லைத்­தீ­வில் நேற்று நடை­பெற்­றது. அந்­தச் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

துண்­டா­டப்­ப­டும் வடக்கு

செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட அருட்­பணி ஆம்ஸ்­ரோங் அடி­க­ளார் தெரி­வித்­த­தா­வது,
30 ஆண்­டு­க­ளாக நாம் போரைச் சந்­தித்­தோம். போரில் தோற்­றோம் என்­ப­தற்கு அப்­பால் அர­சின் திட்­ட­மிட்ட பல்­வேறு செயற்­பா­டு­க­ளால் பல இழப்­புக்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றோம். மகா­வலி அபி­வி­ருத்தி பற்­றிப் பல அறிந்­துள்­ளோம். அதன் உள்­வி­ட­யங்­களை ஆராய்ந்­த­போதே அது எமது மக்­க­ளுக்­குப் பெரும் பாதிப்பு என்­பதை அறிந்­தோம்.

மகா­வலி அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் வடக்கு மாகா­ணம் துண்­டா­டப்­ப­டு­கின்ற ஒரு சூழல் காணப்­ப­டு­கின்­றது. இலங்கை அரசு காலத்­துக்­குக் காலம் திட்­ட­மிட்டு வட­கி­ழக்கு நிலங்­க­ளைத் துண்­டா­டிச் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை அமைத்து நிலங்­களை அப­க­ரித்து மக்­க­ளின் விகி­தா­சா­ரங்­களை மாற்­றும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­கின்­றது.

மகா­வலி அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யில் போருக்­குப் பின்­னர் மிக வேக­மாக முல்­லைத்­தீ­வின் நிலப்­ப­கு­தி­க­ளில் பல சூறை­யா­டப்­ப­டு­கின்­றன. அதை வெளிச்­சத்­துக்­குக் கொண்­டு­வ­ரும் வகை­யில் நாளை பெரும் போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ளோம். அதன் ஊடாக பன்­னாட்டு ரீதி­யி­லும், உள்­நாட்­டில் இருந்­தும் அர­சுக்கு நெருக்­க­டி­க­ளைக் கொடுத்து இந்த ஆக்­கி­ர­மிப்­புக்­களை நிறுத்த வலி­யு­றுத்­து­வோம் – என்­றார்.

கவ­னத்­தி­லெ­டுக்­காத அரசு

மகா­வலி எதிர்ப்பு தமி­ழர் மர­பு­ரி­மைப் பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ரான க.சுதர்­சன் தெரி­வித்­த­தா­வது,

முல்­லைத்­தீவு மக்­கள் பெரும் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர். கடல், நில வளங்­கள் திட்­ட­மிட்­டுப் பறிக்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக அர­சி­யல்­வா­தி­கள் குரல் கொடுத்­தா­லும், அமைப்­புக்­கள் கண்­ட­னங்­கள் தெரி­வித்­தா­லும் அதற்கு அரசு எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வில்லை.

மகா­வலி அபி­வி­ருத்­தித் திட்­டம் என்ற போர்­வை­யில் மகா­வலி அதி­கார சபை ஊடாக வட­கி­ழக்கு மாகா­ணத்­துக்கு இடைப்­பட்ட பகு­தி­யில் பெரும் நிலப்­ப­ரப்பை ஆக்­க­ர­மித்­துள்­ளது. மக்­க­ளின் வயல் நிலங்­கள், வள­மான காடு­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தடைச் சட்­டங்­களை இயற்றி மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைச் சிதைத்­துள்­ள­னர். இந்த உண்மை நிலை­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டும். தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நடக்­கும் ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் – என்­றார்.

சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தின் கருவி

மகா­வலி எதிர்ப்பு தமி­ழர் மர­பு­ரி­மைப் பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ரான வி.நவ­நீ­தன் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழர்­க­ளின் பூர்­வீக நிலங்­க­ளும், வாழ்­வா­தார நிலங்­க­ளும் பறிக்­கப்­பட்­டுச் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. வெலி­ஓயா என்ற பெய­ரில் உரு­வாக்­கப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் 6 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மக்­க­ளு­டன் முல்­லைத்­தீவு மாவட்­டத்­து­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

கொக்­கு­ளா­யில் உள்ள விகாரை, நாயாற்­றில் அமைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்ற விகா­ரை­கள் ஊடாக தமி­ழர்­க­ளின் வர­லா­று­கள் திட்­ட­மிட்­டுத் திரி­பு­ப­டுத்­தப்­பட்டு சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளுக்­கான கரு­வி­யாக மகா­வ­லித் திட்­டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்­தில் உட­ன­டி­யாக மகா­வ­லித் திட்­டச் செயற்­பா­டு­கள் நிறுத்­தப்­பட வேண்­டும். மகா­வலி எல் வல­யத்­துக்கு அடுத்­த­தா­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள கே, ஜே வல­யங்­கள் ஊடாக வடக்கு மாகா­ணத்­தின் இத­ய­பூ­மி­க­ளைத் துண்­டாடி வடக்கு மாகா­ணத்­தின் சனத்­தொ­கையை மாற்­றி­ய­மைத்து இனப்­ப­ரம்­பலை மாற்றி தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் பலத்­தைச் சிதைக்­கும் முயற்­சி­களை உடன் நிறுத்த வேண்­டும்.

தமிழ் மக்­க­ளின் காணி­களை மகா­வ­லித் திட்­டத்­தில் விட்­டுக்­கொ­டுத்­து­விட்டு இனப்­பி­ரச்­சி­னைத் தீர்வு பற்­றிப் பேசு­வ­தில் பய­னில்லை என்ற அடிப்­ப­டை­யில் தமிழ்த் தலை­மை­கள் இந்­த­வி­ட­யத்­தில் ஒன்­று­பட்டு உழை­யக்க வேண்­டும். முல்­லைத்­தீ­வில் நடக்­கும் அமை­திப் பேர­ணி­யில் கட்சி பேத­மின்றி, இன மத பேதங்­க­ளில் இன்றி அனை­வ­ரும் அணி­தி­ரள வேண்­டும் என்று அழைக்­கின்­றோம் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.