ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் என்ன?

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தாக தெரிவிக்கும் அரசாங்கம் வடக்கில் தற்போது செயற்படும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

வவுணதீவு விஜிதா வித்தியாலயத்திற்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு உரையாற்றும் போதே இதனை கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘இலங்கையில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கிலே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு, மாகாணங்களிலேயே அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.இந்தநிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தாக தெரிவிக்கும் அரசாங்கம் வடக்கில் தற்போது செயற்படும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றது’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.