ராணாவுக்கு ஜோடியாகும் மஞ்சிமா!

நடிகை மஞ்சிமா மோகன் என்.டி.ஆர் பயோபிக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில், சிம்புடன் நடித்த ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் மூலம் இளைஞர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர் நடிகை மஞ்சிமா மோகன். பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைக்கத் தவறவில்லை.

தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும் அவருக்கான தனித்த வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கைவசம் தேவராட்டம் மட்டுமே உள்ளதே அதற்கான சான்று. இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகிவரும் என்.டி.ஆர் பயோ பிக்கில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படமாக மார்க் செய்யவுள்ளார் மஞ்சிமா.

ஏற்கனெவே கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடைமையடாவின் தெலுங்கு வெர்சனான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் என்ட்ரி ஆனது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.