மலைகத்தின் பல பகுதிகளில் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் மலைகத்தின் பல பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா- ஹற்றன், டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக தூர பிரதேசத்திலிருந்து வருகை தந்த நோயாளர்கள், பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இப்பணிப்புறக்கணிப்பு காரணமாக  வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு  முற்றாக செயலிழந்து காணப்பட்டபோதும், நோயாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்களின் சேவை நேரக் கொடுப்பனவு, சிங்கப்பூர் உடனான வர்த்த ஒப்பந்தம், மருத்துவர்களுக்கான வாகன சலுகை, வைத்தியத் துறையின் மீது அதிக வரி விதித்தல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.