அலைபேசிகள் சேவை கிடைக்காத கிராமங்கள்!

இந்தியாவிலுள்ள 43,000க்கும் மேலான கிராமங்களில் மொபைல் சேவைகள் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜூலை 27, 2018 நிலவரப்படி இந்தியாவில் 43,088 கிராமங்களில் மொபைல் சேவைகள் இல்லையென்று தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5,97,618 கிராமங்கள் இருந்துள்ளன. இவற்றில் 43,088 கிராமங்களில் மொபைல் சேவைகள் இல்லை என்கிறார் மனோஜ் சின்ஹா. அவரது பதிலில், “வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்றவையுடன் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவையும் அடங்கும். மக்கள் தொகையில் 97 விழுக்காட்டினருக்கு 2ஜி நெட்வொர்க் சேவை கிடைக்கிறது. அத்துடன், 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகள் மக்கள் தொகையில் குறைந்தது 88 விழுக்காட்டினருக்காவது சேவை வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மொபைல் சேவைகளில் மிகவும் பின்தங்கியிருப்பதாக மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

#India  #Mobile  #Service

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.