முல்லைத்தீவில் தொடர் போராட்டம்!

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகிறது.

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள், முல்லைத்தீவு நீரியல் வள திணைக்களத்திற்கு எதிரில் கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்களும், மீனவ குடும்பத்தினரும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்கார்கள் பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்று, முல்லைத்தீவு நீரியல் வள திணைக்களத்துக்குள் நுழைய முற்பட்டமையினால் அங்கு பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டது.

இதன்போது, நீரியல்வளத் திணைக்களத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் 8ஆம் தகதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொலைநகல் மூலம் அறிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திலேயே தொடர்ச்சியான கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொட்டில் அமைத்து அங்கு போராடும் மீனவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.