திருகோணமலையில்10மில்லியன் பெறுமதி வலம்புரிசங்கு மீட்பு!

திருகோணமலை பகுதியில் குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 அங்குளம் அகலம் கொண்ட வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டதுடன்  அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூதூர், கிண்ணியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், 10 மில்லியன் ரூபாய்க்கு வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.