சுருக்­கு­வலை மீதான தடை தொட­ரும்!

முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­குக் குழு ஒன்று அமைப்­ப­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக் குழு­வின் அறிக்கை கிடைக்­கும் வரை சுருக்­கு­வலை மீன்­பி­டிக்­குத் தடை விதிப்­பது என்­றும், ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­தி­க­ளை­யும் இல்­லா­மல் செய்­யப்­ப­டும் என்­றும் மீன்­பிடி அமைச்­சர் விஜித் விஜி­த­முனி சொய்சா நேற்று அறி­வித்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சட்­ட­வி­ரோத தொழில் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பாக சுருக்­கு­வலை மீன்­பி­டிச் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் உள்­ளூர் மீன­வர்­கள் குற்­றம்­சு­மத்­தி­யி­ருந்­த­னர். கடந்த 2ஆம் திகதி கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தி­யி­ருந்­த­னர்.

போராட்­டக்­கா­ரர்­களை கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் சந்­திக்க மறுத்­த­மை­ய­டுத்து, திணைக்­க­ளம் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அன்­றைய தினத்­தி­லி­ருந்து திணைக்­க­ளத்­தின் முன்­பாக தொடர் போராட்­டத்­தில் மீன­வர்­கள் குதித்­தி­ருந்­த­னர்.

கடந்த 8ஆம் திகதி மீன­வர்­க­ளு­டன் கொழும்­பில் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. முல்­லைத்­தீவு மீன­வர்­கள் கொழும்­பில் இடம்­பெ­றும் சந்­திப்­பில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று அறி­வித்­தி­ருந்­தார்­கள். இத­னை­ய­டுத்து முல்­லைத்­தீ­வில் சந்­திப்­புக்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதற்­க­மை­வாக முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை சந்­திப்பு இடம்­பெற்­றது.

இந்­தப் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­குக் குழு ஒன்று அமைப்­ப­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்­தக் குழு­வின் அறிக்கை கிடைக்­கும் வரை சுருக்­கு­வலை மீன்­பி­டிக்­குத் தடை விதிப்­பது என்­றும், ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­தி­க­ளை­யும் இல்­லா­மல் செய்­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் அமைச்­சர் முல்­லைத்­தீவு மாவட்ட நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­துக்கு முன்­பா­கக் கொட்­டகை அமைத்­துப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். தடை செய்­யப்­பட்ட மீன்­பிடி முறை­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­வது தடுத்து நிறுத்­தப்­ப­டும் என்று அவர் வழங்­கிய வாக்­கு­று­தியை அடுத்து மீன­வர்­கள் கடந்த 10 நாள்­க­ளாக நடத்தி வந்த தமது போராட்­டத்­தைக் கைவிட்­ட­னர்.

அமைச்­ச­ரு­டன் கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் நாய­கம் கினிதே ஜன­க­பி­ர­சன்ன குமார, அமைச்சு அதி­கா­ரி­கள், பிர­ச­தி­ய­மைச்­சர் காதர் மஸ்­தான், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன், டக்­ளஸ் தேவா­னந்தா மற்­றும் வடக்கு விவ­சாய அமைச்­சர் க.சிவ­னே­சன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் து.ரவி­க­ரன், ஆ.புவ­னேஸ்­வ­ரன், கம­லேஸ்­வ­ரன், முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன், மீனவ சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் கலந்து கொண்­ட­னர். 

No comments

Powered by Blogger.