மனோவிடமிருந்து பறிபோகின்றது வடகிழக்கு வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி!

தலைமை அமைச்­சர் ரணில் விக் கி­ர­ம­சிங்க­வின் பணி­ய­கத்­தின் மேற் பார்­வை­யி­லும், கண்­கா­ணிப்­பி­லும், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணத் தில் 25 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணியை மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக மேற்­கொள்­ளு­மாறு எதிர்க்­ கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கடி­தம் அனுப்பி­யுள் ளார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தி­லேயே அவர் இந்­தக் கோரிக்­கையை முன் வைத்­துள்­ளார்.

கடந்த ஆண்டு வரவு – செல­வுத் திட் டத்­தில், வட கிழக்கு மாகா­ணங் களில் 50ஆயி­ரம் கல்­வீ­டு­களை அமைக்க அரச தலை­வர் கீழ் செயற் பட்ட தேசிய ஒருங்­கி­ணைப்பு, நல்­லி­ ணக்க அமைச்சு ஊடாக முன்­னெ­டுக்க முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது.

பின் னர் 25ஆயி­ரம் வீடு­க­ளா­கக் குறைக் கப்­பட்­டது. அரச தலை­வ­ரின் கீழ் இயங்­கிய தேசிய ஒருங்­கி­ணைப்பு, நல்­லி­ணக்க அமைச்சு, அமைச்­சர் மனோ­ க­ணே­ச­னின் அமைச்­சு­டன் நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னர் இணைக்­கப் பட்­டது.

வீட்­டுத் திட்­டத்தை வீட­மைப்­புச் செய­ல­ணி­யின் கண்­கா­ணிப்­பில் நடை­மு­றைப்­ப­டுத்­தும் அமைச்­ச­ர­ வைப் பத்­தி­ரம் கடந்த மாத இறு­தி­ யில் அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பிக்­கப் பட்­டது.

அமைச்­சர் மனோ­க­ணே­சன், தனது அமைச்­சின் ஊடா­கவே அது முழு­மை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­ய­து­டன் அதி­கா­ரி­கள் தன்­னிச்­சை­யா­கச் செயற்­பட இட­ம­ளிக்க முடி­யாது என்று அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அமைச்­சர் மனோ­க­ணே­ச­னின் குழப்­பத்­தை­ய­டுத்து, அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­க­வில்லை. வீட­மைப்­புத் திட்­டம் மேலும் தாம­த­ம­டை­யா­மல் விரை­வாக முன்­னெ­டுப்­ப­தற்­காக, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்த கூட்­ட­மைப்பு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் அமைச்­சின் மேற்­பார்­வை­யி­லும், கண்­கா­ணிப்­பி­லும் இதனை முன்­னெ­டுக்­கு­மாறு கூட்­ட­மைப்­பின் ஆலோ­ச­னை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.