யாழ் தென்மராட்சி-சரசாலையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி- சரசாலை தெற்குப் பகுதிகளில் வாள்களுடன் நுழைந்த குழுவினர் வீடொன்றில் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சரசாலை தெற்கு பகுதியில் கனடா நாட்டிலிருந்து வருகைதந்த ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30 மணியளவில் மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில்

வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வாள்களை கொண்டு வீட்டின் ஐன்னல் கதவுகள், மின் விளக்குகளை தாக்கி உடைத்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.