பெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை!

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமியைப் பாரவூர்தி(லொறி) மோதியமையால் படுகாயமடைந்த இரண்டு வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(20) பிற்பகல் யாழ்.நெல்லியடி நகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றுப் பிற்பகல்(20) தமது வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகத் தமது பெற்றோருடன் குறித்த சிறுமியும் நெல்லியடி நகர்ப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பெற்றோருடன் சேர்ந்து வீதியைக் கடக்க முற்பட்ட போதே குறித்த சிறுமியைப் பாரவூர்தி மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை மோதிய பாரவூர்திச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி அக்கரைப் பகுதியைச் சேர்ந்த நிர்மலராஜ் திவ்வியா(வயது-02) என்ற சிறுமியே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.