வாதுவை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

பாணந்துறை வாதுவை பகுதியில் நேற்று இரவு ஹோட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது நோய்வாய்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவத்தில் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றுமொருவர் மாலை உயிரிழந்துள்ளார். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

அளவுக்கு அதிகமான போதைப் பொருள் பாவனையே இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் மூலம் கூடிய நண்பர்கள் குழுவொன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.