பொதுமக்களின் ஆதரவை கோருகிறாம் பொலிஸ்மா அதிபர்??

வடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர கோரியுள்ளார்.

சமய நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தென்னஞ்சோலை மரநடுகை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரநடுகை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”நிரந்தர சமாதானம், நல்லிணக்கத்திற்கு சமுதாய பொலிஸ் சேவை மிகவும் அவசியமானதாகும்.

கிராமத்திற்கு பொலிஸ் என்ற நடமாடும் சேவை மூலம் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளன.

அவை நாட்டின் அபிருத்திக்காகன பொலிஸாரின் பங்களிப்பாக இருக்கிறது. இந்த வேலைத்திட்டம் ஊடாக வடக்கு மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் சிறந்த உறவு நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தற்போது அதிகரித்துள்ள குற்றச் செயல்கள் போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் ஆகியன குறைவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை.

இது நாட்டு மக்களுக்கான பொலிஸ் அதனை பாதுகாப்பது உங்களின் பொறுப்பு. சிறந்த பொலிஸ் சேவையின் மூலம் வடக்கு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.