சச்சின் கொடுத்த அட்வைஸ்!

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள பிரித்வி ஷாவுக்கு தான் ஏற்கனெவே அறிவுரை கூறியுள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார் பிரித்வி. சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர் பள்ளிப் போட்டிகளிலேயே பல சாதனைகளைத் தகர்த்திருக்கிறார். சமீபத்தில் இவரது தலைமையில் இந்திய யூ-19 அணி நியூசிலாந்தில் உலகக் கோப்பையை வென்றிருந்தது.

இந்நிலையில் அவர்குறித்துக் கூறிய சச்சின், “பயிற்சியாளர்கள் உங்களது பேட்டிங் ஸ்டைலை எதிர்காலத்தில் மாற்றுமாறு கூறினாலும் சரி,பந்து வீச்சை எதிர்கொள்ளும் உத்தி ஆகியவற்றை மாற்றச் சொன்னாலும்சரி ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதீர்கள் என்று நான் பிரித்வி ஷாவிடம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளேன்.

காரணம், பயிற்சியாளர் மூலம் கற்பது நல்லதுதான் அதேநேரம் அதிகப்படியான கோச்சிங் பயனளிக்காது. இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷல் பிளேயரைப் பார்க்கும் போது எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். எனவே உங்கள் போக்கிற்கே விளையாடுங்கள் என்றேன்.10 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பேட் செய்வதைப் பார்க்குமாறு நண்பர்கள் வற்புறுத்தியதோடு அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறும் கேட்டனர்” என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.