வடக்கில் இளம் அரசியல்வாதியின் பாலியல் கொடூரம்!

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான உயர்தர மாணவி ஒருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் உயர்தர பரீட்சை எழுதியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் அரசியல்வாதியினால் குறித்த மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த மாணவி, உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுதியுள்ளார்.

மாணவியை சட்ட வைத்தியரிடம் அனுமதிக்கப்பட்ட பின்னர் கிடைத்த ஆலோசனைக்கமைய பொலிஸ் பாதுகாப்புடன், பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக புதுகுடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருடன் மேலும் 5 பேர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் உயிரே போனாலும், தனது 5 நண்பர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் குறித்த இளம் அரசியல்வாதி தெரிவித்துள்ளதாக ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

#Sexual Abuse    #Mulithivu  #Puthukkudiyiruppu   #colombo  #tamilnews

No comments

Powered by Blogger.