எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

மகாலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் இன்று மகாலட்சுமிக்கு எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும்.

மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும். நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும்.

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜை யிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யவேண்டும்.

பூஜை செய்யும் முறை

வரலட்சுமி பூஜையை விரிவாக செய்பவர்கள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முந்தைய நாள் அதாவது வியாழன் அன்றே செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து, பூஜை மண்டபம் ஏற்பாடு செய்ய வேண்டும் வீட்டின் தென் கிழக்கு மூலையில் மண்டபம் அமைக்க வேண்டும்.

குருத்து வாழை மரங்களைக் கட்டி மாவிலைத் தோரணம் தொங்கவிட வேண்டும். மஞ்சள் கயிறுடன் மஞ்சள் மற்றும் பூ சேர்த்துக் கட்டி தயாராக வைத்து விடவேண்டும். (நோன்பு சரடு) பூஜைக்கு வேண்டிய பொருட்களான மஞ்சள் பொடி, குங்குமம், சாம்பிராணி, ஊதுபத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, பழம் என எல்லாம் தயாராக எடுத்து வைத்து விட வேண்டும்.

வியாழன் இரவு துவரம் பருப்புப்போட்டு மஞ்சள் பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் பெண்கள் அன்று இரவு அதை மட்டுமே உண்ண வேண்டும். காரம், புளி சேரக் கூடாது பாட்டுப்பாடத் தெரிந்தவர்கள் பாடலாம். தெரியாதவர்கள் நல்ல அம்மன் பாட்டுகளை ஒலிக்க செய்யலாம். 

No comments

Powered by Blogger.