பொருளாதார நன்மையும் முக்கியமான விடயமே!

அர­சி­யல் தீர்வு முதன்­மையா­ னது. அதற்­கான முயற்­சி­கள் ஒரு தளத்­தில் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சினை ­களுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு பொரு­ளா­தார நன்­மை­யும் முக்­கி­ய­மா­னது.
ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்­கும் உரிய பிரச்சினை கள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும். அதற்­கா­கவே வடக்கு, கிழக்கு அபி­வி­ருத் திக்­கான அரச தலை­வர் செய­ல­ணி­யில் பங்­கேற்க முடிவு செய்­துள்­ள­தாக கூட்­ட­மைப்­புத் தெரி­வித்­துள்­ளது.
வட­கி­ழக்கு அரச தலை­வர் செய­ல­ணி­யில் 48 உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அதில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.
செய­லி­ணி­யின் முத­லா­வது கூட்­டத்­தின் பின்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பணிப்­புக்கு அமை­வாக, கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16 பேருக்­கும் அழைப்பு அனுப்­பப்­பட்­டது.
அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பங்­கேற்­க­வேண்­டாம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கோரி­யி­ருந்­தார். அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்து செய­ல­ணி­யில் பங்­கேற்க கூட்­ட­மைப்பு முடிவு செய்­துள்­ளது.
இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது- வடக்கு, கிழக்­கில் ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளி­லும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சி­னை­கள் உள்­ளன. அவை தொடர்­பில் பேசப்­பட்டு தீர்வு காணப்­ப­ட­வேண்­டும்.
அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்சி இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது. அது வேறு தளத்­தில் நடக்­கின்­றது. அது­தான் முதன்­மை­யா­னது. அந்த விட­யம் முக்­கி­ய­மா­னது என்­ப­தில் மாற்­றுக் கருத்­தில்லை. அது­வரை எமது மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்­திப் பணி­களை முன்­னெ­டுக்­கா­மல் இருக்க முடி­யாது. எமது மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும்.
வெறு­மனே அர­சி­யல் தீர்வு வேண்­டும் என்று கூறிக்­கொண்டு எமது மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கைவிட முடி­யாது. அர­சி­யல் தீர்வு பெற்­றுக்­கொள்­வதை போலவே எமது மக்­க­ளின் தேவை­க­ளை­யும் பூர்த்­தி­செய்ய வேண்­டும்.
வடக்கு முதல்­வர் கூறிய கார­ணி­களை விட­வும் மக்­க­ளின் நில­மை­களை நாம் கருத்­தில் கொண்டு இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளத் தீர்­மா­னம் எடுத்­துள்­ளோம் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.