தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும்!

தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம் இது என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளில் நேற்று இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த துண்டுப்பிரசுரத்தை, தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு விநியோகித்துள்ளது.இதேவேளை, துண்டுப் பிரசுரத்தில்

“முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும், சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்” என்ற தொனிப் பொருளில் துண்டுப் பிரசுரம் நீண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.