திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு மாற்றம்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டுத் திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று(ஆகஸ்ட்10) மாலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், திருமுருகன் காந்தி தேச விரோதமாக ஒன்றும் பேசவில்லை எனக் கூறி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்ப மறுத்து விடுவித்தது.
இந்நிலையில், நேற்று மாலை திருமுருகன் காந்தியை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர் படுத்தினர். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி ராயப்பேட்டையில் திருமுருகன் காந்தி மற்றும் 150 பேர் அனுமதியின்றிப் பேரணியாகச் சென்றதாக திருமுருகன் காந்தி உட்பட 150 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் திருமுருகனை கைது செய்வதாக நீதிமன்றத்தில் கூறியது போலீஸ்.
இதையடுத்து 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் வேலூர் மத்திய சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக சிறை மாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.