நிரம்பியது வீராணம் ஏரி!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரி தன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.5 அடி ஆகும். தற்போது, இதன் நீர்மட்டம் 46.7 அடியாக உள்ளது. இன்று (ஆகஸ்ட் 11) இது முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது விநாடிக்கு 950 கன அடி வீதம், இந்த ஏரிக்கு நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக, வீராணம் ஏரியிலிருந்து 55 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில், இந்த அளவானது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வீராணம் ஏரியில் நீர் திறப்பது குறித்து சிதம்பரம் பொதுப்பணித் துறை செயல் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.