ஒவ்வொரு காணொளியாக வெளியிட தினகரன் திட்டம்!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவை மையப்படுத்திதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நகர்கிறது.
அதாவது, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சமயத்தில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு அதிரடியைக் கிளப்பினார் வெற்றிவேல். அது தினகரனுக்குத் தெரியாமல் வெளியிட்ட வீடியோ என்றும் அப்போது சொன்னார் வெற்றிவேல். ஆனால், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை ஆய்வு செய்தபோது, அங்கே  காணொளிவில் காட்டிய எந்த எவிடென்ஸும் இல்லை. இதனால், ஜெ. ஜூஸ் குடிக்கும் வீடியோ என்பது மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்ற தகவல் ஆணையத்தில் இருக்கும் சிலர் மூலமாகவே கசியவிடப்பட்டதாம்.

‘ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் சசிகலாவும், அவர் சார்ந்த குடும்பத்தினரும்தான் என்று நிரூபிக்கத்தான் ஆணையத்தில் உள்ள சிலர் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அம்மா ஜூஸ் குடிக்கும்  காணொளியோவே பொய்யானது என்று ஆணையம் சொல்லப்போகிறது...’ என்று தினகரனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அவரோ, ‘அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும். நான் பத்திரமாக வைக்கச் சொல்லி கொடுத்து வைத்திருந்த வீடியோவை எனக்கே தெரியாமல்தான் வெற்றிவேல் மீடியாவுக்கு கொடுத்தாரு. அவருகிட்ட கொடுக்காத இன்னும் சில  காணொளியோக்கள் இருக்கு. அது எல்லாமே ஒரே நாளில் எடுக்கப்பட்டதுதான். முதல் வீடியோவில் அம்மா ஜூஸ் குடிப்பாங்க. அந்த வீடியோதான் எல்லோரும் பார்த்தது. அடுத்த வீடியோவில் அம்மா அப்படியே சாய்ந்து படுப்பாங்க. படுத்து ஒரு கால் மீது இன்னொரு காலை போட்டுக்கொண்டு தூங்க ஆரம்பிப்பாங்க. அப்போ அவங்க போட்டிருந்த டிரஸ்ல ஒரு கால் உள்ளே மறைஞ்சிருக்கும். ஒரு கால் மட்டுமே வெளியே தெரியும். இன்னொரு  காணொளியோவில் அம்மா எழுந்து உட்கார்ந்து ஒரு கப்பில் இருக்கும் சூப் குடிப்பாங்க. இவங்க அந்த வீடியோவை பொய் என்று சொன்னால், அடுத்து இந்த  காணொளியோவையும் வெளியிட வேண்டியதுதான். தங்களுக்குத் தெரியாமல் இனி எந்த வீடியோவும் வெளியிடக் கூடாது என ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. நாமதானே வெளியிடக் கூடாது.... வேறு யாராவது ஒருத்தர் வெளியிட்டால் ஆணையம் என்ன செய்யும்? தேவைப்படுற நேரத்துல எடுத்துவிடுவோம்.’ எனச் சொன்னாராம். ஆக, எந்த நேரத்திலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் அடுத்த வீடியோ வெளி வரலாம்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து, அடுத்த ஸ்டேட்டஸை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். “தலைவர் கலைஞர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார் என்பதுதான் திமுக தொண்டர்களிடம் பேச்சாக இருக்கு. தமிழகம் முழுக்க ஒருவருக்கொருவர் இனிப்புகள் கொடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடிவருகிறார்கள். கண்ணீருடன் இருந்த காவேரி மருத்துவமனை கலகலப்பாக இருக்கிறது. எப்படி இருக்கிறார் கலைஞர் என காவேரி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘கலைஞர் சில வாரங்களாக படுத்த படுக்கையாகவே இருப்பதால் அவருக்கு நெஞ்சுப் பகுதியில் சளித் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. அதனால் படுத்தபடியே இருந்தால் சளியின் பாதிப்பு இன்னும் அதிகமாகும். உட்கார்ந்திருந்தால், சளியின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், பிசியோதெரபிஸ்ட்கள் உதவியுடன் அவரை உட்கார வைத்தோம். படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு சில பிசியோதெரபி சிகிச்சைகளை கொடுப்பார்கள். அதை தற்போது கலைஞருக்குக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். சேரில் உட்கார வைப்பதும் படுக்க வைப்பதுமாக மாறி மாறிச் செய்துகொண்டிருக்கிறோம்’ என்று சொன்னார்கள். விரைவில் கலைஞர் கோபாலபுரம் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!” என்ற ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.