வட்டக்கச்சி மாயவனூர் பாடசாலை. பொதுமக்கான குடிநீர்த்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தது த.தே.சி.ம.முன்னனி!

செல்வி.சந்திரராசா ஆதித்தியா(பேர்லின்-ஜேர்மன்) குடும்பத்தாரின் பூரண நிதி உதவியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவும் மனிதாபிமானப்பிரிவும் இணைந்து வட்டக்கச்சி மாயவனூர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர்த்திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்துவைத்தது. இத்திட்டத்தினை நிதி உதவுனர் திரு.சந்திரராசா மற்றும் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான திரு. ஜெகா மற்றும் திரு.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள் சமூக மட்ட அமைப்பின் தலைவர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டார்கள்.Powered by Blogger.