முதன் முதலாக. இலவச ஊடகப் பயிற்சிப் பட்டறை.!

வடமாகாணத்தில் முதன் முறையாக'ஊடகப் பெண்கள் குழு’ வின் ஏற்பாட்டில்  ஊடக நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்,ஊடகவியலாளர்களாக பணிபுரியும் பெண்கள்,  ஊடகத்துறையில் பணிபுரிய விரும்பும் பெண்களுக்கான
ஊடகப்  பயிற்சிப் பட்டறை  05.08.2018 அன்று காலை 9மணி தொடக்கம் மாலை 4 மணி வரை   யாழ்ப்பாணம்  கந்தர்மடம் , பழம்வீதியில் அமைந்துள்ள  பண்பாட்டு மலர்ச்சிகூடத்தில்  இடம்பெற்றது.

    வீரகேசரிப் பத்திரிகையின் மூத்த ஆசிரியரும் இற்றைவரை 25 புத்தகங்களை வெளியிட்டவரும் பல்வகை விருதுகளையும் வென்ற மூத்த பெண் ஊடகவியலாளரும்    அவுஸ்திரேலியாவில் சட்டம் பயின்ற  சட் டத்தரணியும் ,தமிழறிஞருமான     கலாநிதி  சந்திரிகா  சுப்ரமணியன் பங்கு கொண்டு  இலவசமாக பயிற்சிகளை வழங்கினார். இப் பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த ஊடகத் துறை சார்ந்த பெண்கள் பலரும்  பங்கு கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

               யாழ்ப்பாணம்  நியூரங்கனாஸ் ஹோம் பில்டர்ஸ்  மற்றும், மார்க்கம்  கனடா நியூரங்கனாஸ்  நகைமாடம் ஆகியவற்றின் அனுசரணையில் யாழ் தர்மினி பத்மநாதன் அவர்களின் நெறியாள்கையில் இப்பயிற்சி நெறி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பயிற்சி நெறியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டது.இது ஊடகப்பெண்களுக்குக் கிடைத்த முன்மாதிரி நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
#Latha Kanthaija       #Tamil_news   #Reporting #Training  #Jaffna  #Womans


No comments

Powered by Blogger.