அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து – மீனவர் போராட்டம் முடிவுக்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடை செய்யப்பட்டதொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

கடந்த 2 ஆம்திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்து வந்தனர்.

கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா இன்று முல்லைத்தவுக்குச் சென்றிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களைச் சந்தித்தார்.

தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

No comments

Powered by Blogger.