கடலில் குதித்த இந்திய மீனவர்கள் கைது.!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகும் தடுத்துவைக்கப்பட்டது.

கடற்படையினரைக் கண்டவுடன் இந்திய மீனவர்கள் கடலில் குதித்து றெஜிபோர்மின் உதவியுடன், நீரில் மூழ்கிக்கொண்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து இன்றிரவு புதன்கிழமை 10.20 மணியளவில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கடற்படையினரைக் கண்டவுடன் இந்திய மீனவர், றெயிபோமின் உதவியுடன் படகிலிருந்து

கடலுக்குள் குதித்து மூழ்கிய நிலையில் இருந்தனர். அவர்களை விசாரணைக்குட்படுத்திய கடற்படையினர் பின்னர் கைது செய்தனர்.

இந்திய மீனவர்கள் 6 பேரும் தற்போது காங்கேசன்துறை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.