லண்டனில் தமிழர் வணிகநிலைய பகுதியில் துப்பாக்கிச் சூடு!

லண்டன் ஹரோ ரெயினஸ்லேன் பகுதியில் ரெயினஸ்லேன் நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு(ரியூப்) அருகே நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ்பெரி நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கித்தாக்குதல் ஒன்றில் மூவர் சுடப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய அதிர்ச்சிசம்பவம் நேற்றுமாலை 5.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிறியரக உந்துருளி ஒன்றில் (ஸ்கூட்டர்) முகமூடியளிந்து வந்த இருவர் ரெயினஸ்லேன் தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் இருந்த பூங்கா ஒன்றில் நின்ற நின்ற மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்

ரெயினஸ்லேன் உட்பட்ட ஹரோ பகுதியில் தமிழ்மக்கள் அதிகம் வாழுகின்றனர். ரெயினஸ்லேனில் தமிழ் வணிகநிலையங்களும் அதிகம் உள்ளநிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

இதனால் சிறிது அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது வணிகநிலையங்களிற்கு வந்த தமிழ் மக்களும் சில அசவ்கரியங்களிற்கு முகம் கொடுக்க நேரிட்டமை குறிப்பிடத் தக்கது.

நேற்றுமாலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றவேளை அதிகளவு தமிழ் மக்களும் அங்கு கூடிநின்றனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆயுதந்தாங்கிய காவற்துறையினர் அங்கு அதிரடியாக குவிந்தனர்.

தப்பிச்சென்ற தாக்குலாளிகளை தேடி உலங்குவானூர்தியொன்றும் வான் வழி கண்காணிப்பை மேற்கொண்டது.

இந்த துப்பாக்கிசூட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டபோதிலும் பின்னர் விடுவிக்கபட்டதாக லண்டன் காவற்துறை அறிவித்துள்ளது.

கிங்ஸ்பெரி தொடருந்து நிலையத்துக்கருகே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அங்கிருந்து சுமார் 5 மைல் தொலைவில் உள்ள கில்பேர்ண் பகுதியிலும் துப்பாக்கிவேட்டுகள் தீர்க்கப்பட்டது.
Powered by Blogger.