யாழ்.மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம்!

யாழ்.மாவட்ட நிலைமை தொடர்பில் ஆராய பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை அரச அதிபர் எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டியுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

அண்மைக்காலமாக மாவட்டத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு, மர்மநபர்களின் செயற்பாடு காரணமாக மக்கள் அச்சமான நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே பொதுமக்கள் பாதுகாப்புக் குழு கூட்டத்தை அரச அதிபர் கூட்டியுள்ளதுடன் இதில் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்,

செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 
Powered by Blogger.