யாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க முயற்சி!

யாழ்ப்பாணத்தில் 1965இல் திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சியை யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு மேற்கொள்ளுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 53 ஆண்டுகளின் முன்னர் யாழில் சிங்கள மகா வித்தியாலம் திறக்கப்பட்டது. 1953இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பின்னர் 12ஆண்டுகளின் பின் அதாவது 1965இல் யாழில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது.

போர்ச் சூழல் காரணமாக 1985இல் சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்டது.யாழில் இருந்த சிங்கள மகா வித்தியாலய கட்டடம் இலங்கை இராணுவத்தின் முகாமாக காணப்பட்டது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் 1990களின் பின்னரும் இயங்கி வந்தது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்த சூழலினால் அது மூடப்பட்டபோதும் அதன் அதிபராக பணியாற்றிய பௌத்த மதகுரு இறுதி யுத்தம் வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.