பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் காலமானார்!

பிரபல அரசியல் ஆய்வாளரும் புவியியல் பேராசிரியருமான எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ், மாரடைப்பு காரணமாக சற்றுமுன்னர் காலமானார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) காலை காலமானார். இது தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவில், வடக்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாக அன்னார் செயற்பட்டு வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த அவர், ஒரு ஆண் மற்றும் இரு பெண்குழந்தைகளின் தந்தையாவார்.

சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ், சமூக ரீதியான செயற்பாடுகள், இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிக அக்கறையுள்ள சமூக ஆர்வலராவார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாக பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி (MA, Ph.D.) பட்டங்களையும் பெற்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.