யாழில் பெரும் பரபரப்பு!!-பொலிஸார் காயமடைந்த இளைஞன் மீதும் தாக்குதல்!

யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் இரு இளைஞர்களை விபத்து ஏற்படும் வகையில் தடுத்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த இளைஞனை தாக்கியதுடன் குறித்த இளைஞனுடன் வந்த பாடசாலை மாணவன் மீதும் தாக்கி அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணி யளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை பொற்பதி வீதி வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு இளைஞர்கள் வந் துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் தலைகவசம் அணியவில்லை. இதனையடுத்து குறித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் முன்பாக தமது மோட்டார் சைக்கிளை விட்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் எ.டெனிஷ்டன்(வயது-18) என்ற இ ளைஞனின் கால் முறிந்துள்ளது. இதன் பின்னரும் காயமடைந்த இளைஞனை தாக்கிய பொலிஸார். அவருடன் வந்த கொக் குவில்  இராமகிருஷ்ண ம.வி பாடசாலை யில் தரம் 11ல் கல்வி கற்கும்

சுஜீவன் என்ற இளைஞன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடாத்திவிட்டு அந்த சிறு வனை அழைத்து சென்றுள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருடன் தர்க்கப்பட்டு காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொற்பதி வீதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியாக நடந்து கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#jaffna    #srilanka   #jaffna_police   #police #Acdeint   #Tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.