அரசாங்கத்தின் சலுகை மகுடியில் மயங்கி கிடக்கும் சம்பந்தன்!இந்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு கழுவ எப்போதும் தமிழர்கள் தயாராகவே இருக்கின்றனர். அற்ப சலுகைக்காக அடிமைமாடுகள் போல படுத்திருக்கும் எங்கள் கூட்டம் ஒருபோதும் திருந்தப்போவதில்லை.

இன, மத, மொழி பாகுபாட்டை சிங்களவர்கள் கைவிடப்போவதில்லை. தமிழர்களை அடிமைப்படுத்த வேண்டும் என்பதே மகாவம்ச மனநிலை.

இந்த சிங்கள மனநிலையை மாற்றியமைக்க தமிழர்களால் முடியும் ஆனால் சம்பந்தன் போன்ற அற்ப சலுகைக்கு தவம் கிடக்கும் தலைவர்களால் இதனை மாற்றியமைக்க முடியாது.

இன்று ஶ்ரீலங்காவின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கி செல்கின்றது. சம்பந்தன் போன்ற சாரைப்பாம்புகள் அரசாங்கத்தின் மகுடியில் மயங்கி கிடக்கின்றன. நாட்டில் எதிர்கட்சியே இல்லை. இப்படி இயங்குபவர்களால் எப்படி தீர்வுகளை பெற்றுத்தர முடியும்?

யாழ்ப்பாணத்தில் 4% மான நிலம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கபரபட்டுள்ளது. இது பல வருடங்களில் பல மடங்கு விழுங்கப்பட்டு விடும். கிழக்கு ஆக்கிரமிப்பு பற்றி பேசும் நாம் வடக்கின் ஆக்கிரமிப்புக்களை மறந்து விடுகிறோம்.

தமிழர்கள் ஒற்றுமையாக சிந்திக்க வாய்ப்பில்லை அதுவே எப்போதும் சிங்களவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

சிங்களவன் தீர்வு தருவான் என எவன் நம்புகிறானோ அவன் அற்ப சலுகைக்கு அடிமையாகி விட்டான் என்பதே உண்மை.

தற்போது சம்பந்தனை நீக்கி விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக்குவது காலத்தின் தேவையாக உள்ளது.

ஶ்ரீலங்காவில் என்றும் பெளத்த/ சிங்கள மேலாதிக்கமே காணப்படும் என்பது எழுதப்படாத சட்டம். அது கல்வி முதல் கொண்டு அனைத்து விடயங்களிலும் இந்த பேரினவாத சிந்தனை வளர்ந்து விட்டது. இதனை நீக்க எந்த கடவுளாலும் முடியாது.

No comments

Powered by Blogger.