பிரத்தானியாவில் யாழ்பாண கல்லூரிக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியாக் கிளையின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் northolt community center, ealis road, northolt இல் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமானதுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ‘திறமைக்கு முதலிடம் கொடுங்கள்’ ‘யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்’ போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவிலுள்ள நிதி அறங்காவலருக்கு அனுப்பி வைப்பதற்கான கடிதமொன்றிலும் அனைவரும் கையொப்பமிட்டனர்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும், தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும், யாழ்ப்பாணக்கல்லூரியின் வட்டுக்கோட்டை மற்றும் கொழும்பு பழைய மாணவர் சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.