கொழும்பில் பெண் கைதிகள் கடும் மோதல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகள் சிலர் கூறை மீது ஏரி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் பெரும் பதற்ற நிலை
ஏற்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கும், ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட பெண்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் உணவு வசதியை அதிகரிக்குமாறும், தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி இந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.