விஸ்வாசம் மாறாத விவேக் ஓபராய்!

அஜித்துக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

நடிகர் அஜித் சினிமாவிற்கு வந்து 26 ஆண்டுகள் ஆனதையொட்டி அதைச் சிறப்பிக்கும் விதமாக ட்விட்டரில் ஹாஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர் அஜித் ரசிகர்கள். அமராவதியில் ஆரம்பித்து தற்போது விசுவாசத்தில் வந்து நிற்கும் அஜித்தின் கோலிவுட் திரைப்பயணத்தில் அவர்பெற்ற வெற்றிகள், தோல்விகள், சறுக்கல்கள், வீழ்ச்சிகள்,மீட்சிகள் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகரும், அவருடன் விவேகம் படத்தில் இணைந்து நடித்திருந்தவருமான விவேக் ஓபராயும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார். நேற்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டுள்ள அவரது ட்விட்டர் பதிவில், “26ஆவது வருடத்தில் பயணிக்கிறீர்கள் நண்பா, உங்களுக்கு வாழ்த்துகள். உங்களது பெருந்தன்மைதான் உங்களை இவ்வளவு உயரத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. உங்களது படங்கள் இன்னும் எங்களை மேலும் மேலும் மகிழ்விக்கவேண்டும்” என்னும் தொனியில் குறிப்பிட்டிருக்கிறார்.

விவேக் ஓபராய் இந்தியில் கவனம் செலுத்துவதோடு தென் இந்தியப் படங்களிலும் கூட தற்போது அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தென் இந்தியப் படங்களில் நடிக்கவைக்கப்பட இங்குள்ளவர்களால் அணுகப்படும் பாலிவுட் நடிகர்களில் முதன்மைத் தேர்வாக இருப்பதும் விவேக் ஓபராயே.

ஏற்கெனவே தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமாகிவிட்ட விவேக் ஓபராய்,தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து ஒரு படம் என நடித்துவருவது கவனிக்கத்தக்கது ஆகும். 

No comments

Powered by Blogger.