உழவு இயந்திரம் புரண்டதில் ஒருவர் மரணம் 16 பேர் காயம்

தோப்பூர், வீரமாநகர் பகுதியிலிருந்து வெருகல் கோயிலுக்குச் சென்ற உழவு இயந்திரம் இன்று மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர் தோப்பூர், வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பு ஓவியம் (64 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்த 17 பேர்களில் ஐந்து பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த வீ.தனுஜன் (06 வயது) வீ. நவநீதன் (14 வயது) எம்.பாக்கியராசா (70 வயது) மற்றும் பீ.வள்ளிநாயகி (68 வயது) வீ.மாலனி (35வயது) எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வீரமாநகர் பகுதியிலிருந்து வெருகல் திருவிழாவிற்காக உழவு இயந்திரத்தில் சென்ற போது வாழைத்தோட்டம் வளைவில் உழவு 6 இயந்திரம் தடம் புரண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

#trincomalie   #tamilnews 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.