மட்டக்களப்பில் தந்தையும் மகனும் தற்கொலை!

தகப்பனுக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினால் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளத்துசேனை பேரல்லாவெளி வயல் பிரதேசத்தில் தந்தையும், மகனும் கால்நடைகளை வளர்ப்பதுடன் விவசாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது மகன் தொழிலில் ஈடுபாடு காட்டுவது குறைவாக காணப்படுவதாக தெரிவித்து நேற்று மாலை தந்தை மகனை திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை கண்ட தகப்பனும் மரத்தில் தூக்கில் தொங்குவதற்கு முயற்சித்த வேளை அயலவர்கள் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் தகப்பனும் உயிர் இழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Valaichenai   #tamilnews  
Powered by Blogger.